பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன மாத்தூர் பாரதி நகரில் டேனியல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் தனுஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது ஏஞ்சல் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஏஞ்சல் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏஞ்சலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பித்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு செல்போன் கிடைத்துள்ளது. அதில் அவர் இறப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவில் நான் தனுஷை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். ஆனால் அவர் தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். என்னால் எனது காதலனை மறக்க முடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.இதற்காக எனது காதலனை யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம் என அந்த வீடியோவில் கூறியுள்ளார். ஆனால் ஏஞ்சலின் பெற்றோர் தங்களின் மகளின் இறப்பிற்கு காரணமான தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கூறியுள்ளனர்.