துருக்கியில் உடல்நலம் சரியில்லாத குட்டியை சிகிச்சைக்காக பூனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றிற்கு வெளியே வசித்து வந்த பூனைக்கு அங்கு இருப்பவர்கள் உணவு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பூனை சமீபத்தில் இரண்டு குட்டிகளை போட்டுள்ளது. இதில் ஒரு குட்டிக்கு கண்ணில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு உணவளித்த ஊழியர்கள், குட்டிக்கும் உதவி செய்வார்கள் என்று பூனை நினைத்துக் கொண்டுள்ளது.
எனவே அந்தக் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்றுள்ளது. இதைக்கண்ட ஊழியர்கள் பூனையிடம் இருந்து அந்த குட்டியை வாங்கிக் கொண்டு மருத்துவர்களிடம் காண்பித்துள்ளனர். இதனிடையே மருத்துவர்கள் அந்த குட்டியை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அந்த குட்டிக்கு கண்ணில் நோய்தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் அவர்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக அவரை அழைத்துள்ளனர். இதனையடுத்து அந்த மருத்துவமனைக்கு வந்த கால்நடை மருத்துவர் பூனைக்குட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளார். மேலும் குட்டிக்கு உடல்நலம் சரியில்லை என்பதை புரிந்து கொண்ட பூனை அதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.