Categories
தேசிய செய்திகள்

என் குழந்தைய காணல…. வீட்டில் நடந்த சோதனை…. அதிர்ந்து போன போலீஸ்….!!

டெல்லியில் உள்ள சிராக் டில்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் டிம்பிள். இவர்  சில நாட்களுக்கு முன்பு பிறந்து 2 மாதங்களே ஆன தனது பெண் குழந்தை காணாமல் போனதாக புகாரளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் வீட்டிற்கு வந்தபோது குழந்தையை மைக்ரோ ஓவனில் காண்டெடுத்து  விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததும், புகார் அளிப்பதற்கு முன்பே குழந்தை இறந்துள்ளதும்  போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெண் குழந்ததை பிறந்ததை விரும்பாத டிம்பிள், தனது குழந்தையை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |