மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு அஷ்டலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஷ்டலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஷ்டலட்சுமியை சுரேஷ் சிகிச்சைக்காக அயனாவரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அஷ்டலட்சுமிக்கு மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை.
இதனால் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் அயனாவரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் தனது குழந்தை இறந்ததாக கூறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.