செவிலியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது
குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த மேகா என்னும் செவிலியர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். சிவில் மருத்துவமனையில் செவிலியராக இவர் பணியாற்றி வந்த நிலையில் இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதனால் தனது தாய் வீட்டில் இருந்த மேகா தற்கொலை முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
அதோடு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தனது மருத்துவமனையில் இருக்கும் தலைமை செவிலியர்களும் மருத்துவர்களும் என்று கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவர் எழுதிய கடிதத்தின் முழு விபரமும் வெளிவந்துள்ளது. அதில், மருத்துவர் அவினாஷ் என்பவருடன் தனிமையில் இருக்க வற்புறுத்தப்பட்டேன்.
நான் அதற்கு மறுப்பு தெரிவித்தும் தாரா, வனிதா ஆகிய இரண்டு செவிலியர்கள் என்னை அவருடன் இருக்க வற்புறுத்தினர். அதுமட்டுமன்றி மாமியார் மற்றும் கணவர் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தியதால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சிலரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.