தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார்.
இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த பேரிகை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த இளைஞரை அழைத்து நீ அங்கு வந்தால் உனக்கும் எனது மகளுக்கும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அங்கு வந்த இளைஞனை நேற்று மாலை நன்றாக மது அருந்த வைத்து போதையில் உருட்டு கட்டை மற்றும் கல்லால் அந்த நபரை தாக்கி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து நேராக காவல் நிலையத்தில் சரண் அடைந்து சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த இளைஞனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து லட்சுமணன் செட்டியார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையை ஜாதி கொலை என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.