எலான் மஸ்க் ரஷ்ய அதிபர் புடினுக்கு நேருக்கு நேர் சண்டைக்கு சவால் விடுத்துள்ளார்.
ரஷ்யா 19 ஆவது நாளாக உக்ரைன் தலைநகர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் படையெடுப்பால் உக்ரைனில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உக்ரைன் விடுத்த கோரிக்கையை ஏற்றதால் போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் சேவை வழங்குவதாக அறிவித்தார்.
பின்னர் ரஷ்ய அதிபர் புடினுக்கு நேருக்குநேர் சண்டைக்கு சவால் விடுவித்ததோடு சண்டையின் பந்தயம் உக்ரைன் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த சண்டைக்கு தயாரா என்று புடினை குறிப்பிட்டுள்ளார்.
I hereby challenge
Владимир Путин
to single combatStakes are Україна
— Elon Musk (@elonmusk) March 14, 2022
Вы согласны на этот бой? @KremlinRussia_E
— Elon Musk (@elonmusk) March 14, 2022