பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக போட்டியாளர்கள் ஆடல் ,பாடல் ,கேக், உணவுகள் , பரிசுகள் என உற்சாகத்தில் இருந்தனர். இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் ஆரி வெற்றி பெறுகிறார். தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு ‘என் கேள்விக்கு என்ன பதில்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 80 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் அடிப்படையில் ஒரு கேள்வி கேட்கப்படும் .
#Day82 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Jv74S7VKLo
— Vijay Television (@vijaytelevision) December 25, 2020
பிக்பாஸ் கேட்கும் அந்த கேள்விக்கு சரியான பதில் சொல்பவர் ஆக்டிவிட்டி ஏரியாவில் எவ்வளவு பரிசுகளை வேண்டுமானாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக் கொள்ளலாம். இதில் ‘இந்த வீட்டில் எத்தனை நாள் பொங்கல் வைக்கப்பட்டுள்ளது?’ போன்ற எளிமையான கேள்விகளாக பிக்பாஸ் கேட்க அதற்குப் பதிலளித்துவிட்டு பரிசுகளை அள்ளிக் கொண்டு வருகின்றனர் போட்டியாளர்கள். இதிலிருந்து இன்றைய நிகழ்ச்சி கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் காரணமாக மிக சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .