செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் இறந்துவிட்டார் இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றார்கள். மகன் சுந்தரமூர்த்தி அதே பகுதியில் உள்ள கடையில் கணக்கு எழுதும் பணியை செய்து வந்தார். மேலும் அவருடைய குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகவும் சில மாதங்களாக வேலையில்லாத காரணத்தினால் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த சூழலில் அவர் எழுதிய கடிதம் சிக்கி உள்ளது. அதில் தனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை நான் வாங்கி கடன் தொகையை என்னால் திருப்பித் தர முடியாது. இதனால் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன் என எழுதி வைத்துவிட்டு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இது பற்றி தகவல் அறிந்து வந்த கல்பாக்கம் போலீஸர் சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு பிரதி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.