தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இஸ்திரி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்ட ரமேஷ் மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய மகன் தனது தந்தை தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷ் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனது சாவுக்கு காரணம் என் இயலாமையே என ரமேஷ் எழுதியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.