Categories
சினிமா

என் சினிமா வாழ்க்கையை உயர்த்திய படம்…. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்….!!!!

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி காக்கா முட்டை திரைப்படம் வெளியானது. மணிகண்டன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி தேசிய விருதுகளை வென்றது.

இந்நிலையில் எனது சினிமா வாழ்க்கையை உயர்த்தியது காக்கா முட்டை திரைப்படம் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. எப்போதும் என்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மிகச் சிறந்த படம். தடைகளை உடைத்து என்னுடைய சினிமா வாழ்க்கையை உயர்த்தியது. இப்படத்தை கொடுத்த இயக்குனர் மணிகண்டன், தனுஷ், வெற்றி மாறன் ஆகியோருக்கு நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |