நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற இளைஞன் தன் சினிமா வாழ்க்கையை சீரழித்து வருவதாக புகார் அளித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடந்த மாதம் தனது வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை திருட்டுபோனதாக புகார் அளித்தார். இதற்கு சுபாஷ் சந்திரபோஸ்தான் காரணம் என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த அவர், சுபாஷ் சந்திரபோஸை யாரோ இயக்கி வருவதாகவும், அவர் தனது பெயருக்கு களங்கம் விளைவித்து, சினிமா வாழ்வை சீரழித்து வருவதாகவும் கூறினார்.