நாடு முழுவதும் நேற்று நடந்த மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதில் தஞ்சாவூரில் தேர்வு எழுதிய 68 வயது ராமமூர்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆன அவர் தனக்கு சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாலும், இளம் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் நீட் தேர்வு எழுத வந்ததாக கூறியுள்ளார். கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராமமூர்த்தி, தான் இதுவரை 28 பட்டங்களை பெற்றுள்ளதாக பெருமையுடன் கூறினார்.
Categories