Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் தங்கச்சியை கட்டிக்கோ…. ஆசையில் ரூ.1 கோடி கொடுத்த நண்பன்…. பின்னர் நடந்த அதிர்ச்சி…!!

தங்கையை திருமணம் செய்து தருவதாக கூறி நண்பனிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வடமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார். இவர் திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கும் போது இவரது நண்பர் அறிவழகன் தனது மனைவியின் தங்கையானா முத்துலட்சுமியை திருமணம் செய்து தருவதாக கூறியுள்ளார்.இதனால் முத்துலட்சுமியின் குடும்பத்தினரை பாலமுருகன் நேரில் சந்தித்து பேசி திருமணத்துக்கு சம்மதமும் வாங்கியுள்ளார். இதனையடுத்து பைனான்ஸ் தொழிலில் அதிக லாபம் சம்பாதித்த பாலசுப்பிரமணி அறிவழகனின் வங்கி கணக்கிற்கு ஒரு ரூ.1 கோடியும், திருமணத்திற்க்காக 45 பவுன் நகையையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் திடீரென அறிவழகனின் மனைவி, “பாலசுப்பிரமணியிடம்  எனது தங்கச்சி வேறு ஒருவரை காதலித்து வருவதால் நீங்கள் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணி அந்த பெண்ணின் குடும்பத்திடம் பேசியபோது அவர்களும் திருமணத்திற்கு முத்துலட்சுமி திருமணத்திற்கு சம்மதிக்காததால் திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். இதனையடுத்து திருமணம் செய்யவில்லை என்றால் என்னிடம் இருந்து வாங்கிய ஒரு கோடி ரூபாயையும், 45 பவுன் நகையும் திருப்பித் தாருங்கள் என்று பாலசுப்பிரமணி கேட்டுள்ளார்.

அதற்கு அறிவழகனும், அவனது சகோதரர்களும் சேர்ந்து பாலசுப்பிரமணியன் மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்பிரமணி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியனின் இன்னொரு நண்பரான முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்து அறிவழகன், அவரது மனைவி, மற்றும்  முத்துலட்சுமி உட்பட 6 பேரை கைது சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Categories

Tech |