தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகள் திருமணம் முடிந்த கையோடு கேரளாவிற்கு சென்ற பிறகு ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். இந்த ஹனிமூன் முடிந்த பிறகு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களுடைய வேலைகளில் பிஸியாக இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் துபாய்க்கு சென்றுள்ளனர். நேற்று விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு தெரியாமல் உலகின் உயரமான கட்டிடமான ஜார்ஜ் புர்ஜ் கலீபா வளாகத்தில் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு நயன்தாரா ஏற்பாடு செய்திருந்தார். இந்த பிறந்தநாள் விழாவில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பிறந்தநாள் விழாவின்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்காக 3 கேக்குகள் வைக்கப்பட்டிருந்தது.
அதில் முதலாவது கேக்கில் ஹேப்பி பர்த்டே மகனே என்றும், 2-வது கேக்கில் ஹேப்பி பர்த்டே விக்கி சார் என்றும், 3-வது கேக்கில் ஹேப்பி பர்த்டே உலகம் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதில் ஹேப்பி பர்த்டே உலகம் என்று எழுதப்பட்டிருந்த கேக் நயன்தாரா சார்பில் வைக்கப்பட்டது. இதை பார்த்த விக்னேஷ் சிவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன் ஒரு பதிவையும் வெளியிட்டு இருந்தார்.
அதில் அன்பான குடும்பங்களால் என்னுடைய பிறந்தநாள் மிகவும் அழகான நாளாக மாறிவிட்டது. என்னுடைய மனைவியால் அற்புதமான ஆச்சரியம் நடந்தது. என் தங்கம் ஜார்ஜ் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே என்னுடைய பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தார். இது ஒரு மறக்க முடியாத பிறந்தநாள். இதைவிட சிறப்பாக பெற முடியாது. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்கு கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்கும் கடவுளுக்கு நன்றி என பதிவிட்டு இருந்தார். மேலும் பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட நடிகை விக்கி மற்றும் நயனின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CioA5-htM1v/?utm_source=ig_embed&ig_rid=0eb42043-f7b7-4cef-b8b5-62888f357f1e&ig_mid=AAB6CCF9-3B12-495F-B6A0-708F02B4515C