கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் இலகல் தாலுகா அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனுமந்தா என்பவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார். ஆனால் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை. பிறகு மறுநாள் காலையில் கிராமத்திற்கு அருகே உள்ள தோட்டத்து பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தபோது, அனுமந்தா தனது நண்பரின் சகோதரியை காதலித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயம் அவரது நண்பருக்கு தெரியவரவே அவர் தனது சகோதரியை காதலிக்க கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை மறுத்துவிட்டார். இதன் காரணமாக நேற்று முன்தினம் அனுமந்தாவுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து விட்டு, அவரது நண்பர் கொலை செய்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.