இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் மறைவுக்கு சசிகலா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (89) காலமானார். சிறுநீரக பிரச்சனை, நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாகவும் உடல் நல பாதிப்பு இருந்த நிலையிலும் கடைசிவரை கட்சி மற்றும் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் காலமானார்.
அவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் என் தந்தையை மீண்டும் இறந்ததாக நினைத்து ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன் என பாண்டியன் மறைவு குறித்து சசிகலா தெரிவித்துள்ளார். நான் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியதும் போனில் அழைத்து நலம் விசாரித்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என அவர் கூறியுள்ளார்.