Categories
மாநில செய்திகள்

“என் தலைமையில் அ.தி.மு.க மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கு”…. -வி .கே. சசிகலா….!!!!

சென்னை அசோக்நகரில்  அ.தி.மு.க மூத்த தலைவர் பண்ருட்டி ராமச் சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்த வி .கே. சசிகலா அவரது உடல் நலன் தொடர்பாக கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா “பண்ருட்டி ராம சந்திரன் என் மூத்த அண்ணன் எனவே பார்க்க வந்தேன். அரசியல் விஷயமாக இரண்டு பேரும் கலந்து பேசினோம். அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள்தான். அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதே என் ஆசை ஆகும். எம்ஜிஆர் சாதி, மதம் பார்த்து கட்சியை துவங்கவில்லை. அந்த அடிப்படைகொள்கை எங்கள் மனதில் தற்போதும் இருக்கிறது. அ.தி.மு.க என்பது நிறுவனம் அல்ல, எல்லோருக்குமானது.

கட்சியில் உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார். அதனை நிலைநிறுத்துவது என் கடமை ஆகும். அ.தி.மு.க-வில் இப்போது உள்ள சிக்கல்கள் அனைத்தும் காலப் போக்கில் சரியாகிவிடும் என்பது திடமான நம்பிக்கை ஆகும். எம்ஜிஆர் மறைவுக்கு பின்பும் இப்படி நடந்தது. அதன்பின் ஒரு காலகட்டத்த்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து விட்டனர். அதுபோன்று மீண்டுமாக நடக்கும். நீங்கள் குறிப்பிடுவது போன்று நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கூட  அனைவரும் இணையக்கூடும். தொண்டர்கள் நினைப்பது தான் என்னுடைய செயல்பாடாக இருக்கும். என் பயணத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. திமுகவிற்கு எதிரான மன நிலையில் மக்கள் இருக்கின்றனர். தொண்டர்களின் எண்ணப்படியே என் தலைமையில் அ.தி.மு.க மீண்டும் இணைவதற்கு நிச்சயமாக வாய்ப்புள்ளது. ஏனென்றால் தொண்டர்களின் எண்ணம் அது தான்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |