வாலிபரை கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் வசீகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அதை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வசீகரனை சுற்றி வளைத்து தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வசீகரன் அந்த கும்பலிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். மேலும் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வசீகரனை கொலை செய்ய முயன்றது அதே பகுதியை சேர்ந்த மணிமாறன், மாதவ், பாரத், ராஜ்குமார் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வசீகரனை கொலை செய்ய முயன்ற மணிமாறன் என்பவரது நண்பரான மோகன் என்பவரின் கொலை வழக்கில் வசீகரன் சம்பந்தப்பட்டவர் என்பதும், இதனால் பழிக்கு பழி வாங்குவதற்காக அவரது நண்பரான மணிமாறன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.