Categories
சினிமா

என் நாயை கண்டுபிடிச்சு தந்தா இவ்வளவு லட்சம் தாறேன்!…. நடிகை பாரிஸ் ஹில்டன் அதிரடி அறிவிப்பு….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியுமான பாரிஸ் ஹில்டன் செல்லப் பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர் ஆவார். இதனால் அவரது வீட்டில் பல்வேறு நாய்களை வளர்த்து வருகிறார். அந்த ஒவ்வொரு நாய்க்கும் பெயர் வைத்து அழைத்து ஓய்வுநேரத்தை அவற்றோடு தான் கழிக்கிறார். இந்நிலையில் டைமண்ட் என பெயர் வைத்து அவர் வளர்த்து வந்த நாயை ஒரு வாரமாக காணவில்லை. இதன் காரணமாக மனமுடைந்துள்ள பாரிஸ் ஹில்டன் நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெரிய தொகையை பரிசாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என் டைமண்ட் என்ற செல்ல நாயை காணவில்லை. இதன் காரணமாக நான் மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன். அந்நாயை கொண்டுவந்து கொடுத்தாலோ (அல்லது) அதை கண்டுபிடித்து தகவல் தெரிவித்தாலோ எந்த கேள்வியும் கேட்காமல் 10 ஆயிரம் டாலர் பரிசாக வழங்குவேன்” என தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் ரூபாய்.8 லட்சத்து 12 ஆயிரத்து 555 ஆகும். இவரின் இப்பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த பலரும் ஒரு நாய்க்கு இவ்வளவு லட்சமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |