ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு முதியவர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த முதியவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் அரூர் பகுதியை சேர்ந்த அன்சர்கான் என்பதும். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் பணம் கொடுத்து 1076 அடி நிலத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் நிலத்தை கொடுத்தவர் இதுவரை கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.