Categories
மாநில செய்திகள்

“என் நிலைமை இப்போ இப்படித்தான் இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!!

திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5,000 பேர் கலந்து கொண்டிருந்தனர். பொதுக் குழுவில் கட்சியின் தேர்தல் ஆணையராக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து தி.மு.க-வின் தலைவர் பதவிக்கு முதல்வர் ஸ்டாலின் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சூழ்நிலையில், அவரது மனுவை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வழிமொழிந்துள்ளதாக ஆற்காடு வீராசாமி கூறினார்.

இதன் வாயிலாக தி.மு.க-வின் தலைவராக ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக ஆற்காடு வீராசாமி கூறினார். அதனைத்தொடர்ந்து பொதுக்குழு மேடையில் தமிழக முதல்வர் பேசியதாவது ” இது அனைவரும் இணைந்து உழைக்கவேண்டிய காலமாகும். சட்டமன்ற தேர்தலில் வென்று விட்டோம், ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்டோம் என்று மெத்தனமாக இருக்காமல், பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட திமுக-வின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது.

மழை பெய்யவில்லை என்றாலும், அதிகமாக மழை பெய்தாலும் என்னை தான் குறை கூறுவார்கள். ஒரு பக்கம் தி.மு.க தலைவர், அதே நேரம் மற்றொரு பக்கம் தமிழகத்தின் முதல்வர். எனவே மத்தளத்துக்கு 2 பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. பொதுயிடங்களில் சில பேர் நடந்து கொண்டதன் காரணமாக திமுக பழிக்கும், ஏளனத்திற்கும் ஆளாகியது. இன்றைக்கு வீட்டின் பாத்ரூம், படுக்கை அறையை தவிர்த்து அனைத்தும் பொது இடமாகிவிட்டது. பிரைவேட் ஸ்பேஸ் என எதுவுமே கிடையாது. உங்களுடைய நேரத்தை கண்ணியம் ஆக பயன்படுத்தவேண்டும்” என முதல்வர் பேசினார்.

Categories

Tech |