Categories
சினிமா

“என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது”…. மனம் திறந்து பேசிய த்ரிஷா….!!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும்  பல்வேறு பிரபலங்கள் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரியுடன் துவங்கிய விழாவுக்கு முன் நடிகை த்ரிஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது த்ரிஷா பேசியதாவது “இன்று மிகப் பெரிய நாள். கொரோனாவுக்கு பின் இது போன்ற பெரிய நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.

படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை திரை முன் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட்டோம். அதிலும் குறிப்பாக செந்தமிழ் பேச மிகவும் சிரமப்பட்டோம். முன்பே பல முறை ஒத்திகை பார்த்ததால் படப்பிடிப்பு போகும்போது நடிக்கவும், அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிணையவும் எளிதாக இருந்தது. எனக்கு இளவரசியாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதனை மணி ரத்தினம் சார் நிறைவேற்றியுள்ளார். குந்தவை, நத்தினி கதாபாத்திர காட்சிகள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக இருக்கும். அதில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என அவர் கூறினார்.

Categories

Tech |