தன் கடையின் விளம்பரங்களில் நடித்து அதிகம் பாப்புலரான லெஜண்ட் சரவணன் சோலோ ஹிரோவாக அறிமுகமாகிய திரைப்படம் “தி லெஜண்ட்”. பாலிவுட் ஹீரோயின், ஹரிஷ் ஜெயராஜ் இசை, விவேக் உள்ளிட்ட பல்வேறு பெரிய நடிகர்கள் இருக்கும் நட்சத்திர பட்டாளம் வைத்து அவரே அப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.
இத்திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன போதே அதிகம் ட்ரோல்களை சந்தித்தது. அத்துடன் படம் ஓடிடியில் வெளியானால் இன்னும் அதிகம் ட்ரோல்க்ளை சந்திக்கலாம் என்பதால், இப்போது லெஜண்ட் சரவணன் ஒரு அதிரடி முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, லெஜண்ட் திரைப்படத்தை எந்த ஓடிடி நிறுவனத்துக்கும் விற்பதில்லை என அவர் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.