செய்தியாளர் சந்திப்பின்போது பிக்பாஸ் பிரபலம் ஆரி, என் படம் டிராப் ஆனதற்கு காரணம் மோடி தான் என கூறியுள்ளார்.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சூர்யா பிலிம்ஸ் புரோடக்சன் தயாரிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்தி திரைப்படத்தின் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியுள்ளதாவது, “நான் உள்ளே வரும்போதே யார் யார் வந்திருக்கிறார்கள் என கேட்டேன். ராஜன் சார் உதயகுமார் சார் வந்து இருக்கிறார்கள் என்றார்கள். அப்படி என்றால் நான் போய்விடுகிறேன் அவர்களே எல்லாவற்றையும் பேசி விடுவார்கள் என்றேன்.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் உதவாத நிலையில் அத்திரைப்படத்திற்கும் ஜாமின் தரும் முதல் ஆளாக அண்ணன் ராஜன் அவர்கள் இருக்கின்றார். அண்ணன் ஏன் எல்லா பிரச்சனைகளையும் பேசுகின்றார் என்றால் அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது. அண்ணனும் நானும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒன்று ஞாபகம் வந்தது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும். ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன்.
இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கின்றேன். இந்த இயக்குனரும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் அதை தடுத்தது மோடிதான். டிமானிடைசேஷன் வந்து படத்தை கெடுத்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் கே.ஜி.எப் ரசிகராக இருந்தாலும் சரி பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் சரி படத்தை திரையரங்கில் வந்து பாருங்கள். இந்த படம் டிரெய்லரே தரமாக இருக்கின்றது. அதில் உழைப்பு தெரிகின்றது. படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இத்திரைப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என பேசினார்.