பெண்ணை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருணகிரிபட்டி கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சதிஷ்குமார் என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தான் கொடுத்த பணத்தை சதீஷ்குமாரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்த சரஸ்வதியை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து சரஸ்வதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சரஸ்வதியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்து தப்பியோடிய 2 நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்