கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் நகரில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவருக்கு 60 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் கொடுத்த பணத்தைதிருப்பிதா என பாக்கியலட்சுமி ஹரிதாஸ்யிடம் கேட்டுள்ளார். அதற்கு ஹரிதாஸ் பாக்கியலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுக்குறித்து பாக்கியலட்சுமி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரிதாசை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.