அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்தநாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அவசர உதவி குழுவினரை தொடர்பு கொண்டு, என் பிறந்தநாளிற்காக வீட்டிற்கு வந்த அப்பா அனைவரையும் சுட்டு விட்டார் என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது Rasheeda Barzey (45) என்ற பெண்ணும் அவருடைய மகள்கள் Solei spears (20) மற்றும் Chloe Spears ஆகிய மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளனர். காவல்துறையினர் அந்த சிறுமியை தேடியுள்ளனர்.
அந்த சிறுமி பயத்தில் அலமாரிக்குள் பதுங்கி இருந்துள்ளார். மேலும் எனக்கு பெற்றோர் இல்லையே என்று அந்த சிறுமி அழுவதை கண்டவுடன் மனம் உடைந்து போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது சிறுமியின் தந்தை Joseph MC Crimon ற்கும் தாய் Rasheeda விற்கும் இடையில் நீண்ட நாட்களாகவே பிரச்சனையாம்.
சம்பவம் நடந்த அன்று சிறுமியினுடைய பிறந்தநாளை கொண்டாட ஜோசப் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை. Joseph துப்பாக்கியால் மனைவி மற்றும் மகள்களை கொன்றுவிட்டார். ஆனால் கொல்லப்பட்ட இரண்டு மகள்களும் ஜோசப்பின் பிள்ளைகள் இல்லை.
Rasheeda முன்னாள் கணவருக்கு பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு காவல்துறையினர் சிறுமியை மீட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் வீட்டிற்கு சிறிது தொலைவில் இருக்கும் ஒரு இடத்தில் ஜோசப் தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். எனவே சிறுமி கூறியது போலவே, பெற்றோர் உட்பட தன் பிறந்தநாள் அன்று தன் குடும்பம் அனைத்தையும் இழந்து தவித்து வருகிறார். மேலும் ஜோசப் பல வழக்குகளில் தண்டனை பெற்றவர் என்று தெரியவந்துள்ளது.