இயக்குனர் சங்கரின் பிறந்தநாளுக்கு உலகநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே அது இயக்குனர் சங்கரின் படங்கள் தான். இவர் இன்று தன்னுடைய 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் சங்கருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்.
பிரம்மாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் சங்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நிச்சயமாக இந்தியரே, என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நிச்சயமாக ‘இந்தியரே’.
என் பிறந்தநாளை
சிறந்த நாளாக்கியது
உங்கள் வாழ்த்து
மிக்க நன்றி @ikamalhaasan சார்🙏 https://t.co/j6BHuQh7q3— Shankar Shanmugham (@shankarshanmugh) August 17, 2022