Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என் பெயர் எப்படி இல்லாம போச்சு..? அதிர்ச்சி அடைந்த வாலிபர்… தேர்தல் அலுவலரிடம் பரபரப்பு புகார்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாலிபர் ஒருவர் 25 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மீனாட்சி நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கம்புணரி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார். இந்நிலையில் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தொலைந்து விட்ட காரணத்தினால் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தார். அதில் சிங்கம்புணரி மீனாட்சி நகரில் தான் அவருடைய வீட்டு முகவரி இருந்துள்ளது. இந்நிலையில் அவர் சட்டமன்ற தேர்தலன்று வாக்களிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவருடைய பெயர் அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இல்லை. இதனால் விக்னேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இணையதளத்தில் தனது வாக்கு எங்கு உள்ளது என்று ஆய்வு செய்தார். அப்போது 25 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டநிலை என்ற ஊராட்சியில் அவருடைய பெயர் இருந்தது தெரியவந்தது. இருப்பினும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். இதையடுத்து அவர் ஜெயங்கொண்ட நிலை கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். வீட்டின் முகவரி மீனாட்சி நகர் சிங்கம்புணரி என வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் போது 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பெயர் மாறியது எப்படி என தெரியவில்லை. தேர்தல் அலுவலரிடம் இதுகுறித்து அவர் புகார் தெரிவித்தார்.

Categories

Tech |