மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தையும் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்த தம்பதிகள் சாந்தகுமார் – ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் சாந்தகுமார் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். மேலும் அவரது மனைவி தனது இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வருகின்றார். இதனையடுத்து அவர்கள் தனது மூத்த மகளின் திருமணத்திற்க்காக 100 பவுன் நகையையும், 8 லட்ச ரூபாய் பணத்தையும் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஸ்வரி குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதனை அடுத்த வீடு திரும்பிய ராஜேஸ்வரி வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிலே திருட்டு நடந்திருப்பதை அறிந்த அவர் கதறி அழுதுள்ளார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது