குலசேகரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி காதலனுடன் காவல்நிலையம் வந்து சேர்ந்துள்ளார். தன் மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று முன்னாள் கவுன்சிலரான மாணவியின் தாய் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் கூறியதாவது,
குலசேகரம் அருகில் கொல்லாறை கைதகல் காலனியில் தசரதன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மனைவி உஷா திற்பரப்பு பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர். தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திற்பரப்பு பேரூராட்சியில் 1 வது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகளான தனிஷா லஷ்மி திங்கள் நகரில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றார்.
இந்நிலையில் முட்டை காடு சரல் விலை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜெனிசுயும் தனிஷா லட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே இரண்டு பேரும் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி தக்கலை அருகே உள்ள ஒரு கோவிலில் மறைமுகமாக திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இருவரும் வழக்கம் போல் அவரவர் வீட்டிற்கு சென்று உள்ளனர். இந்த காதல் செய்தி தனிஷா லட்சுமியின் பெற்றோருக்கு தெரிந்து அவர்களை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் இருபதாம் தேதி தனிஷாலட்சுமி திடீரென்று காணாமல் போனார். இதுதொடர்பாக தனிஷா லெட்சுமின் பெற்றோர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஜெனிசுடன் தனிஷா லட்சுமி சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெனிசு, தனிஷா லட்சுமி இருவரும் குலசேகரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இது பற்றி காவல்துறையினர் பெற்றோருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த தனிஷா லட்சுமியின் தாய் உஷா தனது மகளை கட்டி அணைத்து தன்னுடன் வந்து விடுமாறு கேட்டு உள்ளார் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தனிஷா தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் தனது கணவனுடன் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்
இதனால் மனமுடைந்த உஷா காவல் துறையினரிடம் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கெஞ்சியுள்ளார் ஆனால் காவல்துறையினரும் உங்கள் மகள் மேஜர் அதனால் எந்த முடிவும் ஆனாலும் அதை எடுக்கும் உரிமை உங்கள் மகளுக்கு தான் இருக்கிறது என்று கூறிவிட்டதால் உஷா காவல் நிலையத்திலும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.