மகனை மிரட்டி பணம் பறித்த நபரை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊருணி கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்து அறிந்த கணேசன் தனது நண்பரான சுந்தரபாண்டியன் என்பவருடன் சென்று ராஜ்குமாரை தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த கணேசன் ராஜ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணேசன் மற்றும் சுந்தரபாண்டியை கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.