மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இந்நிலையில் தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டதாக மாணவியின் தாயார் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தர்மன்(20) என்பவர் திட்டக்குடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை பார்த்தது தெரியவந்தது. இவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் தர்மனை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.