Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” தாயாரின் பரபரப்பு புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி காணாமல் போய் விட்டதாக அவரது தாயார் பெரம்பலூர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Categories

Tech |