சிறுமியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அரியலூரை சேர்ந்த குமார் என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.