நடிகை ரேகா அமெரிக்காவில் வேலை செய்யும் தனது மகளை பார்க்க முடியாததால் கவலை படுவதாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. அவருடைய மகள் அமெரிக்காவில் தன் படிப்பை முடித்தார் பின்பு அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் அவரால் சென்னைக்கு திரும்ப வர முடியவில்லை.
இதைப்பற்றி நடிகை ரேகா கூறுகையில்: “எனது மகள் நியூயார்கில் படித்து முடித்து தற்பொழுது அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். என் மகளைப் பிரிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் ‘விசா’ கிடைக்காத காரணத்தினால் நானும் என் கணவரும் தவித்து வருகிறோம். எங்களது மகள் அமெரிக்காவிலேயே படிப்பை முடித்து வேலை செய்வதை பார்த்து சிலர் பொறாமை படுகின்றனர். ஆனால் எனக்கு யார் மீதும் பொறாமை இல்லை, எப்பொழுதும் நான் இளமையாக இருப்பதாக நினைக்கிறேன். அதனால் தான் சினி திரையுலகில் புதிதாக வரும் கதாநாயகிகளுடன் போட்டி போட முடிகிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.