Categories
உலக செய்திகள்

என் மகள் எப்படி இறந்தாள் தெரியுமா?…. உயிரிழந்த மகளின் தந்தை வேதனையுடன் கூறிய செய்தி…. கொரோனாவால் ஏற்பட்ட சோகம்….!!

கனடாவில் கொரோனா தொற்றால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி எமிலி கொரோனாவால் பலியாகியுள்ளார். இது குறித்து அவரது தந்தை கூறுகையில் எமிலி கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்றும் அதன்பின் ஐந்து நாட்கள் கழித்து அவரது உயிர் பிரிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எமிக்கு முதலில் சளி தொந்தரவு இருந்தது என்றும் பின்னர் சுவாசிப்பதில் சிவராம் ஏற்பட்டு அவளால் எழுந்திருக்க இயலவில்லை. இதனால் அவர் படுத்த படுக்கையாக எந்த உணர்வுகளும் இன்றி இருந்தாள் அதன்பின் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம் என கூறினார். இதனிடையே அவருக்கு கொரோனாவுடன் நிமோனியாவும் ஏற்பட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் எமிலி தாயும், சகோதரரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |