நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையாலும், விடா முயற்சியினாலும் தற்போது நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டு உள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.
அதில் என்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போது அவ்வளவு பிரச்சினைகள் வரும். அது என் அம்மாவுக்கு கூட தெரியாது. என் மனைவியிடம் மட்டும் தான் இதைப் பற்றிக் கூறுவேன். படம் வெளியாகும் அந்த நாள் இரவு வரை ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் என் மனைவி தான் எனக்கு நம்பிக்கை தருவார் என்று தெரிவித்துள்ளார்.