Categories
தேசிய செய்திகள்

என் மனைவிக்கு தெரியாமலேயே…. மாமனாரின் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன்…. நிதின் கட்கரி…!!!

டெல்லி மற்றும் மும்பைக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடர்பாக ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, எனக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. அப்போது என்னுடைய மாமனாரின் வீடு மராட்டியத்தில் ராம்டெக் நகரில் சாலையின் நடுவே அமைந்திருந்தது.

இதனால் புதிதாக அமைக்கப்படும் சாலைக்கு இந்த வீடு இடையூறாக இருந்தது. எனவே என்னுடைய மனைவிக்கு தெரியாமலேயே, என்னுடைய மாமனாரின் வீட்டை இடிக்க நான் உத்தரவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |