பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மண்ணங்காடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணியான சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினர் சுமதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து குடும்பத்தினர் அனுமதியுடன் சுமதிக்கு அறுவகை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சுமதிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுமதியை திருச்சியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜேந்திரன் தனது மனைவியின் இறப்பிற்கு பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காதது தான் காரணம் என கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.