Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும்”…. நடிகர் அர்னவ் பேட்டி….!!!!!

சின்னத்திரை நடிகர்கள் அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் மாறி மாறி பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்து வருகின்றார்கள். 

கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை மதம் மாற கட்டாயப்படுத்துவதாகவும் திவ்யா புகார் கொடுத்தார்.

ஆனால் அர்னவ் தனது மனைவிதான் அவரின் நண்பர்கள் சொல்வதைக் கேட்டு இதுபோல நடந்து கொள்வதாகவும் அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் கூறினார். மேலும் திவ்யா தன்னுடன் சண்டை போடும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இதனிடையே திவ்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்த அர்னவ் கூறியுள்ளதாவது, எனது மனைவி திவ்யாவை நான் அடித்ததாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் என் விரல் கூட அவர் மீது படவில்லை. அவர் அளித்த பொய்யான புகாரின் பேரில் போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். எனக்கு என் மனைவி வேண்டும். என்னுடைய மனைவி மற்றும் குழந்தையை மீட்டு தர வேண்டும்.

எங்கள் குடும்ப சண்டையை அவருடன் இருப்பவர்கள் இப்படி பெரிதாக்கி விட்டார்கள். திவ்யா இதுவரை போலீசார் விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும். பிறக்கப் போகிற குழந்தையுடன் நான் இருக்க வேண்டும். என் மனைவி மற்றும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. மீறி பாதிப்பு ஏற்பட்டால் சட்ட ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என பேட்டியளித்தார்.

சிறிது நேரத்தில் திவ்யாவும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, நான் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகுதான் மனரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தேன். அர்னவ் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என வாய் அளவில் மட்டுமே சொல்கின்றார். மனதளவில் அவர் சொல்லவில்லை. 45 நாட்களாக என்னுடன் பேசாமல் ஒரே வீட்டில் இருந்தார். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் கருவை கலைக்க வேண்டும் என்றால் ஏன் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்? என பேசினார்.

Categories

Tech |