உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் அகமத். அரசு ஊழியரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தனக்கு 3 நாள் விடுப்பு வேண்டுமென தனது மேலதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த விடுப்பிற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, “எனக்கும் எனது மனைவிக்கும் சிறிய சண்டை ஏற்பட்டதில் அவர் எனது 3 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வர ஆக 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை விடுப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.