Categories
உலக செய்திகள்

என் மனைவி என்னை பிரிஞ்சி போயிருவாங்க…. குண்டை தூக்கி போட்ட ஒபாமா …!!

அமைச்சரவையில் தான் இடம்பெற்றால் தன் மனைவி தன்னை விட்டு சென்று விடுவார் என ஒபாமா அச்சம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோதிடர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் புதிய அதிபராக பிடன் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அமைச்சரவையில் இடம்பெறுவது சம்மந்தமாக கேள்வி ஒன்று ஒபாமாவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த ஒபாமா, “பிடன் தனக்கு அமைச்சரவையில் ஒரு இடம் கொடுத்தால் நான் அதில் இடம்பெற மாட்டேன்.

இருப்பினும் ஒருவேளை நான் அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில் என்னுடைய மனைவி என்னை விட்டு பிரிந்து போய் விடுவார்” என்று ஒபாமா தன்னுடைய அச்சத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகையின் பணியாளராக செயல்பட தான் தற்போது எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை. ஆனாலும் பிடனுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்வதாக ஒபாமா கூறியுள்ளார். 2009 2017 வருடம் வரை அமெரிக்காவின் 44வது அதிபராக இருந்த ஒபாமாவின் தலைமையில் துணை அதிபராக பிடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |