Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனைவி ஒரு நல்ல தாயாக இருப்பார் என நினைத்ததே இல்லை”….. புகழ்ந்த சூப்பர் ஸ்டார்….!!!!!

நடிகர் சாருக்கான் தனது மனைவி குறித்து பெருமையாக கூறியது ரசிகர்களை கவர்ந்து விட்டது.

இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் ஷாருக்கான். இவர் சென்ற 1999-ம் வருடம் கௌரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்கின்ற மகனும் சுஹானா என்கிற மகளும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் வாடகை தாய் மூலம் ஆபராம் கானுக்கு பெற்றோர் ஆனார்கள். இந்த நிலையில் தனது மனைவி கௌரி குறித்து ஷாருக்கான் கூறியது ரசிகர்களை கவர்ந்து விட்டது.

அவர் தனது மனைவி கௌரி குறித்து பேசியதாவது, கௌரி ரொம்ப சிம்பிள். இத்தனை வருடங்களில் அவர் அப்படியே தான் இருக்கின்றார். நான் வேண்டுமானால் மாறி இருக்கலாம். ஆனால் அவர் இத்தனை வருடங்களாக மிடில் கிளாஸ் ஆக சிம்பிளாக நேர்மையானவராக இருக்கின்றார். மேலும் புத்திசாலியும் கூட. என் பிள்ளைகளுக்கு சிறந்த தாயாக இருக்கின்றார். அவர் ஒரு நல்ல தாயாக இருப்பார் என நான் நினைத்ததை இல்லை. அப்படிப்பட்டவர் சிறந்த தாயாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. என் போன்ற தந்தை இருக்கும் குழந்தைகளுக்கு கௌரி தான் சரியான தாய் என பேசியுள்ளார்.

Categories

Tech |