Categories
உலக செய்திகள்

“என் மனைவி தற்கொலை பண்ணி சாகல!”…. 7 வருஷத்துக்கு பிறகு…. உண்மையை உடைத்த கணவர்…. ஷாக்கான காவல்துறை….!!!!

அமெரிக்காவில் மனைவியின் ஆயுள் காப்பீடு தொகைக்கு ஆசைப்பட்டு கணவர் செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Susan Winters (வயது 48) என்ற பெண் வழக்கறிஞர் கடந்த 2015-ஆம் ஆண்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்தும், உறைதலை தடுக்க பயன்படுத்தப்படும் மருந்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் Susan அந்த மருந்துகளை குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு அந்த பெண்ணின் மரணம் தொடர்பில் அதிர வைக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது Susan Winters மற்றும் அவரது கணவர் Gregory ‘Brent’ Dennis Henderson ( வயது 59 ) இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதையடுத்து போதைக்கு அடிமையான Gregory தன்னுடைய மனைவியின் ஆயுள் காப்பீடு ( 1 மில்லியன் டாலர்கள் ) தொகைக்கு ஆசைப்பட்டு அவருக்கு மருந்தை கொடுத்து துடி துடிக்க கொலை செய்துள்ளார்.

இந்த கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட Gregory, போதைப்பொருள் வாங்குவதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக தான் மனைவியின் ஆயுள் காப்பீடு தொகைக்கு ஆசைப்பட்டு இந்த கொலையை செய்தேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார். பின்னர் இந்த கொலை குற்றத்திற்காக Gregory-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிடப்பட்டது.

Categories

Tech |