Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் மனைவி போய்ட்டா…! அதுக்கு நீ தான் காரணம்… சாமியாருக்கு கத்திக்குத்து… சென்னையில் பரபரப்பு …!!

மனைவி சண்டை போட்டு கணவனை விட்டு பிரிந்து சென்றதற்கு சாமியார் தான் காரணம் என்று எண்ணி கணவன் சாமியாரை கொடூரமாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன்(56) அதே பகுதியிலுள்ள ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திருமலை (38) என்பவரின் மனைவி அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு இரண்டு நாட்களுக்கு முன் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கு அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என்று கணவன் ராஜேந்திரன் எண்ணியுள்ளார். தன்னை பற்றி தன்  மனைவியிடம் ராஜேந்திரன் தவறாக சொல்லியிருப்பார் என்று எண்ணி திருமலை கோபத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து சாமியார் ராஜேந்திரனை சந்திப்பது போல் சென்று பின்பு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக இரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த போலீசார் இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Categories

Tech |