நடிகை மகிமா நம்பியார் முதன் முதலில் 15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார். சாட்டை திரைப்படத்தில் அறிவழகி என்ற கதாபாத்திரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியாக நடித்தார். அதன் பின்னர் பள்ளி படிப்பை முடித்து அவர் நான்கு திரைப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நடிகை மஹிமா நம்பியார் CS அமுதன் இயக்கத்தில் ரதம் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. அப்போது மஹிமா தூங்கும் படத்தை சிஎஸ் அமுதன் ட்விட்டரில் பகிர்ந்து கடின உழைப்பு என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மஹிமா, “என் மானம் போச்சு. மரியாதை போச்சு. எல்லாம் போச்சு” என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.