பண்ருட்டி அருகே உள்ள முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் டிஆர்பி ரமேஷ் உள்பட 5 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கடலூர் திமுக எம்பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில் எம்பி ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டியில், என் மீதான புகாரானது ஆதாரமற்றது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன். நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எனக் கருதி சரணடைந்தே என்று கூறியுள்ளார்.