Categories
அரசியல் மாநில செய்திகள்

என் மீது எத்தனை வழக்குனாலும் போடுங்க…. ஆனா இதை மட்டும் செஞ்சிடுங்க…. எஸ்.பி வேலுமணி…!!!

மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக விருப்ப மனு இன்று முதல் தொடங்கியது. அந்த வகையில் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் விருப்ப மனுக்களை இன்று காலை முதல் அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவை மாவட்டத்தில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் முன்னாள் முதல் அமைச்சர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக வழங்கினர்.

தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற பின் கோவையில் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் .மேலும் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என தினமும் பலர் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர், என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை. ஆனால் கோவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |